Saturday 27th of April 2024 01:31:25 AM GMT

LANGUAGE - TAMIL
எங்கள் மாஸ்டரை உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!

எங்கள் மாஸ்டரை உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!


தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களாகிய எங்களுக்கு ‘மாஸ்டர்’ ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகின்றோம். தயவுசெய்து அவரை உங்களுக்கு ‘ஹெட் மாஸ்டர்’ ஆக்கிவிடாதீர்கள் என்ற வாசகங்களுடன் விஜய் படத்தையும் சேர்து அவரது ரசிகர்கள் சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவரால் அச்சிடப்பட்ட இந்த போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. இச் சுவரொட்டி குறித்த தகவல் மிக வேகமாக விஜய் ரசிகர்கள் கடந்து பரவிவருகின்றது.

இந்த போஸ்டர் குறித்த படம் இணையத்தளங்களில் விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தபோது வருமான வரித்துறை சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு இரண்டு நாட்கள் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் விஜய் மீதான அதீத கவனத்தை அவரது ரசிகர்களிடத்திலும் ஏனைய தரப்பிலும் ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் தொடர்பில் வெளிப்படும் ஒவ்வொரு விடயமும் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE